அளவுக்கு மிஞ்சினால்…………..

நமது உலகம் முன்பு போல் இல்லை. அறிவியலும் ஆய்வுகளும் வளர்ந்து விட்டன.  ஆனால் நமது உடல் நலத்தையும் மன நிம்மதியையும் பற்றி நினைப்பதே இல்லை.  அதற்கு மூல காரணம் நம் கையுடன் ஒரு உடல் உறுப்பு போல இருக்கும் இந்தத் திறன்பேசிதான்.  நான் அதைப் பழிக்கவில்லை.  அது நமது அறிவுத் திறனை வளர்க்க, சந்தேகங்களைத் தீர்க்க மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கெள்ள உதவுகிறது.  நாம் இந்த செயல்களைச் செய்ய இந்த திறன்பேசியை பயன்படுத்துவது தவறே இல்லை.  மேலும் நான் அதை ஆதரிக்கின்றேன்.  ஆனால் நம்முள் பலர் இந்தக் கருவியை  தவறாகப் பயன்படுத்துவது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.  இந்தச் சின்னக் கருவியை நமது வாழ்க்கையை வளர்க்கப் பயன்படுத்தாமல், பலரின் வாழ்வை சிதைக்கப் பயன்படுத்துவது நன்றாக இருக்கிறதா?

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு  என்ற  பழமொழி இந்தத் திறன்பேசிக்கும் பொருந்தும்.  நாம் திறன்பேசியின் தீமைகளைக் களைந்து அதை நல்லவற்றுக்காகப் பயன்படுத்தி நமது சமுதாயத்தை மேம்படுத்துவோம்!மேலும் நமது குடும்பத்துடனும். நண்பர்களுடனும் நமது நேரத்தைப் பகிர்ந்திடுவோம்.  மகிழ்ச்சியில் திளைத்திடுவோம் !

           வாழ்க மனித சமுதாயம் !!

யோக புவனேஸ்வரி.உ

XI  A