இந்தியாவின் பொற்காலம்

ஞாயிறு சோழ தேசத்தைச் சற்று உற்று பார்த்ததுஅப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த பொன்னி நதி பொன்போல காட்சியளித்ததுஅங்கு சிறுசிறு அலைகளில்  நான்தான் பலசாலி  என்று ஒன்றோடு ஒன்று மோதியதுமோதும்போது அதிலிருந்து  சிறுசிறு நீர்த்துளிகள்  வைரம்போல  காட்சியளித்ததுஓடிக்கொண்டிருக்கும் நீர், அதன் கரையிலிருக்கும் மணலைக் கொண்டு செல்ல ஆக்கிரோஷமாக ஓடியதுஆனால் மணலோ நீரோடு போகவில்லைதோல்வியைத் தழுவிய நீரோ சரி இருக்கட்டும் என்று பெரு மூச்சு விட்டதுஞாயிறு சற்று மேலே எழுந்தது.   தன் மேகப்படுக்கையில் இருந்து அப்போது பறவைகள் ஏழு ஸ்வரங்களிலும் எழுபத்திரண்டு ராகங்களின் அழகிய கீதங்கள் பாடினஅது ஒரு அழகிய பொற்காலம்.   நீங்கள் சிந்திக்கலாம்  நான் ஏன் இதனை  எழுதுகிறேன் என்று.   ஏனெனில் நீங்கள் நினைக்கும்  இந்தியாவின்  முன்னேற்றம் கட்டடங்களிலோ, பணத்திலோ இல்லைநான் இப்போது சொன்ன அந்த பொற்காலத்திலேயே  உள்ளது.  

  2020 ஆம்ஆண்டு நாம் வல்லரசாக மாறுவது கட்டடங்களிலோ, பணத்திலோ, வசதியிலோ கிடையாது.   நதிகளிலும் , இயற்கையிலும், விவசாயத்திலும்தான் உள்ளதுநதி நமது சொத்துபயிர்கள்தான் நமது பொற்காசுகள்கங்கை கூவமாகியதுபொன்னி என்னும் காவிரி பாலைவனமாக  மாறியது.   இவை மீண்டும் பழைய நிலைக்கு வரும் இயற்கை விவசாயம் நமது நாட்டில் செழித்தால், நமது நாடு  வல்லரசுதான்.

கடைசியாக இக்காகிதத்தின் மூலம் இதைக் கூறுகிறேன்.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

ஜா.நவீன் டோனி

7 –