
இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம். ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. ஆனால் இந்தியாவின் பாரம்பரிய வேலையாகக் கருதப்படும் விவசாயத் தொழிலில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதை அனைவரும் தேர்ந்தெடுப்பதில்லை. அதை ஏளனமாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் சிலர் இன்றும் உழவுத் தொழிலை ஏற்று அதனை உயர்த்தினால் இந்தியா மேன்மை அடையும் என்று எண்ணி தொடர்ந்து ஈடுபடுகின்றனர். உயிர் தொழில்நுட்பத்துறை மற்றும் நுண்ணியல் தொழில்நுட்பத்துறையிலும் இப்பொழுது வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. நாம் நம் நாட்டிலுள்ள வளங்களையும், தொழில் நுட்பத்தையும் அறிந்து அதற்கேற்ற கல்வியைக் கற்று, இந்தியாவின் வளத்தை மேம்படுத்துவோம்.
சி.பிரஷீதா
X அ
