இயற்கை அழிகிறது;செயற்கை விளைகிறது!

மண்ணில் முதல் துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன.  மழை நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கைப் பெறுகிறது.  மழை பெய்ய உதவுவது காடுகளில் உள்ள மரங்கள்தான்.  ஆனால். மனிதர்களான நம்மைப் போன்றோர் சுயநலத்திற்காக மரங்களை அழித்து காடுகளை ஆக்கிரமித்து நகரமாக மாற்றுகிறோம்.  மரங்கள் பல உயிரினங்களுக்கு   வாழ்விடமாக அமைகிறது.  நாம் மரங்களை வெட்டுவதால் பல உயிரினங்கள் வேரொடு அழிகின்றன.  சில நகரத்துக்குள் புகுகின்றன.  நாம் விலங்குகளை குற்றம் சொன்னால் அது நம் குற்றம்தான்.  காடுகளில் மரங்கள் இருந்தால் விலங்குகள் ஏன் நகரம் வர வேண்டும்  மரங்கள் நம் சுற்றுச்சூழலைப் பேணுகிறது.  ஆனால் நாம் காடுகளைப் பேண மறந்து விட்டோம்.  காடுகளிலிருந்து பல உபயோகமான பொருள்கள் கிடைக்கின்றன.  நாம் மட்டும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் கூடாது.   நம் வருங்கால சந்ததியும் அதை அனுபவிக்க வேண்டும்.  காடுகள் மண்ணின் தன்மையை உயர்த்துகின்றன.  சத்துகள் வீணாகாமல் பாதுகாக்கிறது.

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பது போல் மரங்கள் நம் நாட்டின் கண்கள் என நினைக்க வேண்டும்.  ஒவ்வொரு இளைஞரும் வீட்டுக்கு ஓர் மரம் வளர்த்தால் நம் இயற்கையைப் பாதுகாக்கலாம்.  நம் அன்றாட பயனுக்காக மரங்களை அதிக அளவில் வெட்டிக் காடுகளை அழிக்கிறோம்.  மரம்  அனைத்தையும்  தருகிறது  ஏன் அதை அழிக்கிறோம்  ஏன் அதைப்போல காப்பது இல்லை  மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள்,   மருந்துகள் முதலிய அனைத்தும் வேண்டும்.  ஆனால்  மரம் வேண்டாம்.   இது என்ன   நியாயம்  நண்பர்களே !

காட்டில் ஒருத்தன் மரம் விளைத்தான்

நகரத்தில் ஒருவன் அதை அழித்தான்

மரப்பொருட்கள்  வேண்டும்  என்று  சொன்னான்

ஆனால் காட்டில் வாழ்வினங்கள் வேண்டாவாம்

இதைக் கேட்ட ஒருவனை மற்றொருவன்

பைத்தியம் என்றான் –  என்னடா தம்பி

மரத்தை இப்பொழுதாவது வளர்த்து

வருங்காலத்தில் நன்மையைப் பெறு!

காடுகளை பேணுவோம் !  மரங்களை வளர்ப்போம் !

இதைக் குறிக்கோளாகக் கொண்டு முன்னேறுவோம்!

.யோகேஸ்வரன்

12 –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *