
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஊடகங்கள் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குiwறைக்கின்றது என்று சொல்லுகிறார்கள்.இதைப் படிப்பவர்கள் ஆச்சர்யப்படலாம் ஆனால் இதுவே உண்மை,
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், இருபது வருடங்கள் மக்களின் உடற் சீர் நிலை இயக்கத்தை கவனித்து வருகிறார்கள். இதில் நூறில் எண்பது விழுக்காடு மக்களுக்கு உடல்நிலையில் மிகப்பெரிய மற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் அதிகமான ஊடகப்பயன்பாடுஅமெரிக்காவில் வளர்ந்துள்ளது. இதனால் இதயநோய்கள், மரபு சம்பந்தமான நோய்கள், மனஅழுத்தம் போன்றவை அதிகரித்துள்ளன. நோய் என்ற ஒன்று உருவானால் மனிதனின் ஆயுட்காலம் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதிகம் ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள். ஆதலால் அவர்களின் வருங்காலத்தில் உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
“குடும்பத்தை விட்டு தனித்து இருக்கிறார்கள் என்னுடன் பேசுவதே இல்லை. எப்பொழுதும் போனும் கையுமா இருக்கிறான் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் இதற்கு காரணம் பெற்றோர்களும் தான். குழந்தைகள் என்றும் பெற்றோர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. ஏனென்றால் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை.இதனால் அந்தக் குழந்தை வளரவளர தனிமையில் இருக்கும். இந்த தனிமையைப் போக்க அந்த குழந்தை தொலைக்காட்சி, கணினி பயன்பாடு, போனில் கேம்ஸ் விளையாடுவது என்று தனக்கே ஒரு வட்டத்தை உருவாக்கும். அதே குழந்தை இளைஞனான பிறகு குடுமபத்தை விட்டு தனித்து பெற்றோர்களுடன் பேசாமல். நண்பர்களிடம் மட்டும் பேசுவது அதுவும் சமூகவலைதளங்களில் மட்டுமே பேசுவது என்று அந்த வட்டத்தில் இன்னொரு வட்டம் உருவாகும். அந்த வட்டத்தை உடைக்க விரும்பினால் அது பெற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் உள்ள உறவில் விரிசலை உருவாக்கும்.
இதற்கு தீர்வு ?
- முடிந்தமட்டும் பெற்றோரும் குழந்தைகளும் ஒரு பத்து நிமிடமாவது மனம் விட்டு பேசுங்கள். ஒரு நட்புறவை குழந்தையிடம் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- இளைஞர்களின் முக்கியமான கடமை பெற்றோரைப் புரிந்து கொண்டு நடப்பது அவர்கள் உங்களை நினைத்து கவலைப்படும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது.
- அனைத்தும் தெரிந்த இளைய சமுதாயம் கொஞ்சம் முயற்சியெடுத்து சமூக வலைதளங்களில் தங்களின் பயன்பாட்டு நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- உலகத்தை ரசிக்கப் பாருங்கள் அன்றாடம் வெளியே ஒரு மணிநேரம் விளையாடுவது, அல்லது வெளியே சென்று நடைபோட்டு வாருங்கள். இது உங்களுக்கு மனநிம்மதியைத் தரும். புத்துணர்வு கிடைக்கும்.
- உடற்பயிற்சி , யோகா , தியானம் என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் பார்க்க ஆரோக்கியமாகக் காட்சியளிப்பீர்கள்!
ஒரு நிதர்சனம்……..
என்னதான் நீங்கள் இதனைக் கடைப்பிடித்தாலும் ஒரு நிதர்சனம் என்னவென்றால் உங்கள் வாழ்க்ififகை உங்கள் கைகளில். எதை எப்பொழுது செய்யவேண்டும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஊடகங்கள் நமக்கு உலகறிவை ஊட்டுகிறது. ஆதலால் அதனைப் பயன்படுத்துவது pkமிகவும் அவசியம். ஆனால், அதனுள் இருக்கும் தவறின் கதவுகளைத் திறக்கவேண்டாம். பயணிக்கவும் வேண்டாம். வாழ்க்கையை வாழ்வது ஒருமுறைதான் அதனை நன்றாக, சமூகம் நம்மை பெருமைபடுத்தும் விதத்தில் நடந்துகொள்வோம். இளமை ஒரு முறையே அதனை சரியாகப் பயன்படுத்தினால் முதுமையில் நிம்மதி கிட்டும். எனவே, ஊடகத்தை உலகறிவிற்காகவும் சமூக நலனிற்காகவும் பயன்படுத்துவோம்.
வாருங்கள் ஊடகங்களை விடுத்து,
உறவுகளை நேசிப்போம் !
ஒன்றாகக் கைகோர்ப்போம்!
கிரிநந்தினி
XI B
