
தொலைபேசியை நோக்கிச் செல்லும் இந்த உலகில் நாம் மனிதனையும் அவனுடன் ஏற்பட்ட உறவையும் மறந்து விடுகிறோம். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதர்கள் இப்போது மனித உறவே வேண்டாம் என்று பணத்தின் பின் ஓடுகிறான். உறவினர்களோடு வாழ்ந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு நாம் வாழ்ந்தால், நம் வாழ்வில் ஏற்படும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். உறவு என்பது கடவுள் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய சொத்து. அந்த உறவைக் காப்பதும் இழப்பதும் நம் கையில்தான் உள்ளது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் வாக்கிக்கிற்கு ஏற்ப நாம் இந்த உலகினுடன் வாழ வேண்டும். உறவைக்கட்டிக்காக்கும் பொறுப்பு நம்முடையது மட்டும் அல்ல அனைவரும் அதேபோல் உறவைப் பேணிக் காக்க வேண்டும். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்னும் ஒரு வரியே உறவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது,
சுருதிப்பிரியா. ச
XII-B
