
உழவே உலகின் அச்சாணி
அதைப் பார்த்து வாழ்த்துவாய் நீ.
ஏரை நீயும் தூக்கிடுவாய்!
மக்களின் வாழ்வை காத்திடுவாய்!
உழவுத் தொழிலைப் பழக்கிடுவாய்!
நாளைய உலகை உயர்த்திடுவாய்!
உழவை நீயும் பழகு!
அதில் வரும் உணவே மருந்து!
உழவு வெறும் தொழிலல்ல
அதுவே நம் உயிர்.
பேணிக் காத்திடுவோம்!
ஏற்றம் பல பெற்றிடுவோம்!
அ. நோவா ஜெய்சிங்
10-அ
