ஊடகமெனும் அசுரன்

இன்று  இளைஞர்கள் படிக்கிறார்களோ இல்லையோ ஆனால் ஊடகங்களை  நன்கு பயன்படுத்துகிறார்கள்.    அவற்றின் பாதிப்புகளை நன்கு அறிந்தும் இளைஞர்கள்  மன நலத்தைப் பாதிக்கும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.  ஊடகங்களில் இன்ஸ்டாகிராமுக்கு முதல் இடம்  என்று ஐக்கிய நாடுகளில்  நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகின்றது.  அவை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஊடகங்களுக்கு நன்மைகள் தீமைகள் இருந்தாலும் அதிக அளவில் இருப்பது தீமையே.  நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கிறது.  இதைத் தடுக்க பல வழிகள் இருந்தும் அதைப் பின்பற்ற முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.  எனவே நன்மை தீமைகளை அறிந்து ஊடகம்  என்னும அசுரனிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் !தேவையானவற்றுக்கு மட்டும் பயன்படுத்துவோம்.!

சீ.மோனிஷா,

IX  C