எண்ணமே வாழ்வு

 நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள் உண்டு.  விருப்பங்களும் உள்ளன.  ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில்

அவர்களுக்கேற்றவாறு  நம்மை  மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்,  வளைந்து கொடுக்கிறோம்.  ஆனால், நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.  நம் எண்ணங்களை பொறுத்தே நம் வாழ்வு அமையும்.  நம் எண்ணங்கள் நல்வழியில் பிறந்தால்  நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும்.  இதுவே  மறுவழியில்  பிறந்தால் நம்மை  அழித்துவிடும்.

இது என் வாழ்க்கை நிகழ்வு என் பள்ளியில் நடைபெற்ற இன்ஃபினி   என்னும் நிகழ்வில் எண்ணமே வாழ்வு என்பதை மனதார உணர்ந்தேன்.  எண்ணங்கள் ஒரு மனிதனை உயர்வடையவும் உதவும் மற்றும் அழிப்பதற்கும் உதவும்.  அது நம் மன உணர்வுகளைப் பொருத்தே அமையும்.  நாம் நம் மனதார மற்றவர்களுக்கு தீங்கில்லாமல்  நல்வழியில் நினைக்கும் நினைவுகள் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் நடைபெறும் என்பது அனுபவப்பூர்வமான  கருத்து.  மற்றவர்களுக்கு நன்மை நினைத்தால் நம் வாழ்வு செழுமையானதாய் விளங்கும்.  நம் எண்ணங்கள் தூய்மையானதாய் இருந்தால் நாம் யாருக்காகவும் எதற்காகவும் நடிக்க வேண்டியது இல்லை.  நாம் நாமாக இருப்போம்.  உலகை நமதாக்குவோம்.

 ஜெயா

11-ஆ