
ஒரு மருத்துவர் ஆவதுதான் என்னுடைய கனவு மற்றும் இலட்சியம், நம் நாட்டில் மருத்துவர்களும் காவல் துறையும்தான் இறைவனுக்குச் சமம். நான் ஒரு மருத்துவர் ஆகி மக்களுக்காகப் பணிபுரிவேன். மக்களுககு என்னால் முடிந்த மருத்துவ வசதிகளைச் செய்வேன். கிராமப் புறத்தில் உள்ள மக்களுக்கு இலவசமான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுப்பேன். நான் மருத்துவர்களை ஓர் கடவுளாய் எண்ணுகிறேன். அவர்கள் தான் நாம் உயிருக்குப் போராடும் போது நமக்கு சிகிச்சை அளித்து நம் உயிரைக்காக்கிறார்கள். மருத்துவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நானும் ஓர் மருத்துவர் ஆகி நேர்மையாகவும் இலட்சியத்துடனும் பணி புரிவேன். இதுவே என் இலட்சியம்.
சு.நித்யஸ்ரீ
VIII ‘ஆ’
