
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டி உண்டு.
வாழ்க்கையில் பெரிதாக சாதித்தவர்களுக்கும் கூட ஒரு வழிகாட்டி உண்டு. பெரும்பாலும் வழிகாட்டி என நாம் கூறுபவர்கள் நம் பெற்றோர், ஆசிரியர், நண்பன் எனப் பலர். ஆனால் என் வாழ்க்கையின் வழிகாட்டியோ புத்தகம் , புத்தகம் ஒரு நல்ல நண்பன். புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றிவிடும். புத்தகம் நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கான வழிகளையும் காட்டும். புத்தகம் நமக்கு அறிவைத் தரும். திறன் பேசி நமக்கு அழிவைத்தரும். அதனால் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகத்திற்குத் தர வேண்டும். உலகில் சாகாவரம் பெற்ற ஓர் உன்னத பொருட்களில் புத்தகமும் ஒன்று. எனவே என்னை நல்வழிப்படுத்திய புத்தகம் ஒர் சிறந்த வழிகாட்டி ஆகும்.
மு.சஞ்சய்குரு
IX -B
