
எனது கனவு பள்ளி பெரியதாகவும். அழகாகவும் இருக்க வேண்டும், எனக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும், நல்ல நண்பர்களும், ஆசிரியர்களும் இருக்க வேண்டும். விளையாடவும், நூலகத்தில் புத்தகம் படிக்கவும் நேரம் கிடைக்க வேண்டும். எனக்கு நிறைய பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்க வேண்டும். நான் என் பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ வேண்டும். நான் வரைந்த படங்களைப் பள்ளியில் ஒட்ட வேண்டும். ஆடிப்பாடி மகிழ்ந்து கற்கவேண்டும்.
நான் என் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சமமாகப் பார்ப்பேன். நான் என் ஆசிரியர்களுக்கு என்றும் வகுப்பில் மாணவர்கள் சத்தம் போடாமல் இருக்க செய்வேன்.அவர்களுக்குப் படிப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வேன்.
ஸ்ரீஷா
6 – அ
