
இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான். அந்த கிராமங்களின் வாழ்வு உழவர்கள் மற்றும் இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பது நமது தேசத்தந்தை காந்தியடிகளின் கூற்றாகும்.
இந்தியாவின் முதன்மையான தொழில் என்றால் அது வேளாண்மைதான். பெரும்பாலானோர் உழவர்கள் தான் நம் நாட்டில் . பண்டைகாலத்தில் நிலம் அதுவும் விவசாய நிலங்களை உடையோரே செல்வந்தர்களாகக் கருதப்பட்டனர். தமிழர்கள் நிலத்தின் தன்மைக்கேற்ப அவற்றை செம்மண் நிலம், களர்நிலம், உவர்நிலம் எனப் பிரித்தனர். செம்மண் நிலத்தை அதன் பயனைக் கருதிப் போற்றினர். செம்புலப் பெயல் நீர்ப்போல என்னும் குறுந்தொகை வரி அதனை உணர்த்தும்.
இன்றைய வேளாண்மை
இன்று நமது பருவநிலை மாற்றங்களை நம்மால் உறுதியளிக்கவே முடியாது. வளர்ந்து வரும் மக்கள் தொகையின் பசியைப் பூர்த்தி செய்ய இன்று இருக்கிற விவசாய நிலங்கள் போதுமானதா என்பது ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கிறது. ஆனால் இந்திய அரசு பல முயற்சிகளில் வேளாண்மையை முன்னேற வைப்பதற்கு முயற்சி செய்கிறது. ஆசியாவிலேயே முதலிடத்தில் நிற்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் உள்ளது. இந்தியாவில் சுமார் 6 முக்கியமான வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. இந்த வேளாண்மைக் கல்லூரிகள் கீரீன் ரெவல்யூஷன் என்று சொல்லப்படுகிற பசுமைப் புரட்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்று நிலவுகிற நீர் பற்றாக்குறையின் காரணமாக குறைந்த நீரில் எப்படி அரிசியை விளைய வைப்பது என்று கண்டுபிடித்திருக்கிறது. இது இன்னும் பல முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு க்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இதுபோல பல முயற்சிகள் மேற்கொண்டு வேளாண்மை செழிக்க நாம் உதவ வேண்டும்.
சீ.சூர்யா
10 ‘அ’
