சாகசப்பயணம்

கனவுகளை எண்ணிக்கொண்டே இருந்தால் அவற்றை நாம் விரைவில் அடையலாம்.  அப்துல் கலாம் அவர்கள், நம் போன்ற இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்றார்.  எனது கனவு, நான் என் வாழ்க்கையை  முழுமையுடன்,  சோதனைகளின்றி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் வாழ்க்கை  என்றால்  சோதனைகள் இருந்தே தீரும்.    நான் எனது உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்தியக் கடற்படையில் இணைந்து, கடற்படையில் பணியாற்றிவிட்டு அதற்குமேல் உயர்வடைய இளங்கலைப் பட்டம் பெற்று  மேற்படிப்புகள் மேற்கொண்டு அயல்நட்டில் பணியாற்றிவிட்டு எனது மனைவியுடன் சாகசப் பயணம் சென்று எனது வாழ்வின் உச்சத்தை அடைவேன்.

ஆனால் எனது கனவிற்கு முதற்படி இந்தியக் கடற்படையில்   இணைவதாகும்.  அதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து, உடற்பயிற்சி செய்து உயரவேண்டும்.  இந்தியக் கடற்படையில் இணைவது எனக்கு வருமானத்தையும் சேர்க்கும்.  அதே நேரத்தில் உடலை பிணியின்றியும் வைக்க இயலும்.  இக்கட்டுரையை படிப்போரது கனவுகளும்  நனைவாக வாழ்த்துகிறேன்.

 .  சாபிர் உசேன்

11- அ