சுற்றுச் சூழலைக் காப்பதில் மாணவர் பங்கு

16

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தோறும் மோசமடைந்து வருகின்றது.  நீர், நிலம், காற்று  என அனைத்துப் பகுதிகளிலும் மாசுகள் அதிகரித்து வருகின்றன.  இம்மாசுகளால் உலக உயிர்களின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டேயிருக்கின்றது.  விதவிதமான புதிய நோய்கள் படையெடுக்கின்றன. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன.  எனவே, மாசுப்பாட்டை நீக்கி சுற்றுச்சூழலைப் பேண வேண்டிய கடமையும் அவர்களையே சார்கின்றது.  இந்த நடவடிக்கையில் மாணவர் பங்கு எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்பதை குறித்து என்னுடைய கருத்துகள்:

  • நாகரீகப் போர்வையில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூர வீசும் பாலித்தீன் பாக்கெட்டுகளையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் அதில் முழுமையான அளவில் மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது.
  • குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் போட்டுப் பழகிக் கொள்ள வேண்டும்.
  • அரசின் அனுமதியின்றி நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகளைப் பற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
  • பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் இரைச்சல் மிகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் கூற வேண்டும்.

மாணவர்கள் விழிப்புணர்வை ஊட்டும் அறிவுப்பூர்வமான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இதனால் மக்கள்  வீடுகளில் உள்ள அறிவியல் சாதனப் பொருட்களைக் கூட சுற்றுப்புறம் சீர்கேடு அடையாத வகையில் பயன்படுத்த முன் வருவார்கள்.

பொ. சிவஸ்ரீகா

VIII ‘இ’