சேரிடம் அறிந்து சேர்

நாம் எப்பொழுதும் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்ளும்  முன் முதலில் அவரது குணத்தை நன்கு ஆராய்தல் வேண்டும்.  அவ்வாறு ஆராய்ந்த பின்பு அவருடன் சேரலாமா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவெடுத்தல் வேண்டும்.

நட்புஎன்பது எப்பொழுதும் ஒருவனின் வாழ்வை மேன்மையாக்க வேண்டுமேயன்றி அவன் வாழ்வைக் குலைத்துவிடக் கூடாது.  அவ்வாறு அவன் மேன்மையடைய அவனது நண்பர்கள் தூய்மை,உண்மை மிக்கவர்களாய்த் திகழ்தல் வேண்டும்.  அத்தகையோரை நாம் தேடிக் கண்டுபிடித்து அவர்களை நம் நண்பராக்கிக் கொள்ளுதல் வேண்டும்.  அவ்வாறு செய்தால் நம் வாழ்வு சிறக்கும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பன் மிகவும் தேவை . அத்தகைய நண்பனை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  சேரிடம் அறிந்து சேர வேண்டும்.

சு.சுப்ரமணியம்

XII A