
கருவில் உதித்ததால்
கற்றுக் கொடுத்தவள் தாய்.
கனவிலும் நன்றி எதிர்பாராமல்
கற்றுக் கொடுப்பவள் ஆசிரியை.
உணவின் தன்மை, ருசி
அறியக் கொடுத்தவள் தாய்.
உலகின் தன்மை, உண்மை
அறியக் கொடுப்பவள் ஆசிரியை.
பார்த்து பார்த்து என்னை
பாசமாய் வளர்ப்பவள் தாய்.
பாங்குடனே வாழ்வின் அர்த்தங்களை
பகிர்ந்து கொடுப்பவள் ஆசிரியை.
கைமாறு எதிர்பாராமல் வாழ்வில்
ஒளி ஏற்றிக் கொடுப்பவள் தாய்.
கைப்பிடித்து அழைத்து வாழ்வில்
வழி நடத்திச் செல்பவள் ஆசிரியை.
மொத்தத்தில் என் வாழ்வில் தாயின்
மறுவுருவாய்த் திகழ்பவள் ஆசிரியை.
க.மதுமிதா,
VIII ‘ஆ’
