திறன் பேசியின் திருவிளையாடல்கள்

அக்காலத்தில் மக்கள் பொழுதுபோக்கிற்கு திருவிழா, விளையாட்டுபோட்டி மற்றும் பல ஆரோக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.  இன்றைய காலத்தில் குழந்தைகளும் பெரியோர்களும் திறன் பேசியில்தான் பொழுதைக் கழிக்கின்றன,  திறன் பேசி இல்லாதது  அந்தக் காலம்; திறன் பேசி மட்டுமே இந்த காலம் என மாறியுள்ளது. திறன் பேசியின் உபயோகம் மிகவும் அதிகரித்து விட்டது.  நம் உடலுறுப்புகளைப் பாதிக்கின்றன.  இது மனிதர்களை மிகவும் ஆட்டிப் படைக்கின்றன.  மனித வாழ்வில் திறன் பேசியின் முக்கியத்துவம் அதிகரித்து உலக நாடுகள் முழுவதும் தற்போது திறன் பேசியேவாழ்க்கையாகிவிட்டது.    நாம் திறன் பேசியைப் பயன்படுத்தலாம் ஆனால் தேவையை  மீறி உபயோகம் செய்யக் கூடாது.  எனவே திறன்பேசியைக் குறைப்போம் நாட்டையும் நம்மையும் காப்போம்!

வெ.கார்த்திகேயன்

IX A