
நம் வாழ்வின் ஒரு பகுதி நகைச்சுவை;
அது மனிதர்களின் அன்றாட தேவை.
வாழ்வில் அனைவருக்கும் உண்டு பகை;
அதை அழிக்கும் ஆயுதமே நகை.
குழந்தைகளைச் சிரிக்க வைப்பவர் கோமாளி;
அவரின் சிரிப்பு எதிரிகளைத் தாக்கும் கோடாளி.
உழைப்பாளர்கள் நெற்றியிலிருந்து விழுவது வியர்வை;
அவர்களின் எழில் மிகுந்த புன்னகை காட்டும் அவர் உயர்வை.
ஆசிரியர்கள் மாற்றுவது மாணவர்களின் வாழ்வை;
அவர்களின் புன்னகை எங்கள் வாழ்வில் பதிவு செய்யும்
ஒரு மறக்க முடியாத நிகழ்வை.
அ.லீலா
12-அ
