
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
– திருவள்ளுவர்
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று. நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு நண்பர்களோடு இணைந்து வாழ்வது மிகவும் அவசியமாகும்.தமிழ் இலக்கியத்தில் நட்புக்கு கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், ஔவையார், அதியமான், ஆகியோரதுநட்ப இலக்கணமாகச் சொல்லப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட திருக்குறளில் உள்ளன்பு கொண்டு நட்பை வளர்ப்பதே சிறப்பு என விளக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலச்சூழலில் உள்ளன்போடு நட்பு பாராட்டுபவர்கள் குறைவு. ஆகவே ஒரு விழிப்புணர்வுடன் நட்பைத் தொடர வேண்டியது அவசியமாகிறது. கூடா நட்பு கேடாய் விளையும் என்பது பழமொழி.. எனவே ஒருவரோடு நட்புக் கொள்ளும் போது அவர்களைப் பற்றி முற்றிலுமாக அறிந்துக் கொண்டு நட்பைத் தொடருவதைப் பற்றி முடிவு செய்யலாம்.
பள்ளியில் அல்லது கல்லூரியில் பயிலுகின்ற காலங்களில் பாடங்கள் தொடர்பாகவும், பொது அறிவு தொடர்பாகவும் மற்றும் எதிர்காலம் குறித்தும் நண்பர்களுடன் கலந்துரையாடுவது அவசியமாகிறது.எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதில் நண்பர்களின் பங்கும் அவசியம். இதனால் தான் சேரிடம் அறிந்து சேர் என்ற கருத்து உருவானது. எனவே வாழ்க்ififகையை இனிமையாக்க நல்ல நண்பர்கள் அவசியம். பள்ளியில் தொடங்கி வாழ்வின் இறுதி காலம் வரை உற்ற துணையாய் வருகின்ற நல்ல நண்பர்களை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றியடைவோம்.
மோனிசா.எம்.என்
VIII – இ
