நுகர்வோர் பாதுகாப்பு

நுகர்வோர் என்போர் வியாபாரிகளின் பொருட்களைப் பணத்திற்கு ஈடாகக் கொடுத்து அதனைப் பயன்படுத்துவோர் ஆவர்.    அவர்கள் அதனைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளதால் அவர்களுக்கு எந்த நோயும், ஆபத்தும் அதனால் வரக்கூடாது என்பது நுகர்வோர் பாதுகாப்பாகும்.  இன்று பல தொழிற்சாலையில் உணவுப் பொருட்களில் கலப்படம் நடக்கிறது.  மக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் ஒரே குறிக்கோள்.  அவர்கள் சிறிதும் மக்களைப் பற்றி எண்ணுவதில்லை.  அவர்களது நோக்கம் பணம் ஈட்டுதலே.  ஆனால் அனைத்து இடங்களிலும் இது நடக்கிறது என்று கூற முடியாது.  சமூக வளைதளங்களில் பல போலியான செய்திகளும் வெளியிடப்படுகின்றன.

அரசாங்கம், நுகர்வோருக்கு எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதற்காக நுகர்வோர் மையங்கள் அமைத்துள்ளது.  அங்கு அவர்களது குறைகளை அறிந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ஒரு பொருளைப் பற்றி அறிந்து கொள்வது  நுகர்வோரின் உரிமை.  ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால் அவர்கள் அப்பொருளைப்பற்றி அறியலாம்.  அரசாங்கம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது.  நாம் நுகரும் பொருளைப் பற்றி அறிந்துக் கொள்வது நமது உரிமை !

அ.சாபிர் உசேன்

X A