நூலகமும் நானும்

நூல் என்னும் சொல் என்னை வியக்க வைக்கிறது.  சிறிய வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்க மிகவும் பிடிக்கும்.  இந்த எண்ணம் தான்  என்னை நாள்தோறும்  நூலகம் செய்யத் துண்டியது.  ஒரு நாள் என்னை ஒருவர் உன் நண்பன் யார் என்று கேட்டார்.  அதற்கு நான் சொன்ன பதில் அவரை வியக்க வைத்தது.  நான் என் உயிர்த்தோழன்  நூலகம் என்றேன்.  என்னுடனே எப்பொழுதும் இருந்து. என்னை வழி நடத்தி. என்னை அறிவாளியாக  ஆக்கிய ஒன்று நூலகம்.  நல்ல புத்தகமே சிறந்த நண்பன்  என்ற பழமொழி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஒவ்வொரு நாளும் என்னை உயர்த்திக்கொண்டு செல்வது நூல்தான்.  எனவே நூலகமும் நானும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்போம்.

மோனிஷா,ம,நா,

9-ஆ