
வாழ்க்கையில் பல செயல்களை நாம் புரிகிறோம். நாம் அவற்றில் சிலவற்றைத் தன்னலமுடனும் தன்னலமில்லாமலும் செய்கிறோம்.
அன்னை தெரசா போன்றோர் உலகின் அமைதிக்காகத் தன்னலமற்ற தொண்டுகள் பல செய்துள்ளார். செயல்களை நாம் நம்முடைய நலனுக்காக மட்டும் செய்யாமல், அனைவரின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும்.
தன்னலமுடைய செயல்கள் பிறரை எவ்வாறு பாதிக்கிறது என்பதனை நாம் அறிந்திருக்க மாட்டோம். தன்னலமுடைய செயல்கள் நமக்கு மட்டுமே பலனைத் தரும். ஆனால் தன்னலமற்ற செயல்களைப் புரிந்தால் நாம் மகிழ்ந்தது மட்டுமல்லாமல் பிறரையும் மகிழவைக்கும். பயனடைந்தோர் நம்மை தன் மனதில் வைத்திருப்பர்.
நாமும் உதவாமல் தன்னலமுடன் இருப்பவனைப் போன்றில்லாமல், ஏழை தனக்குரிய பொருளைப் பகிர்ந்து கொள்வது போல் தன்னலமற்று விளங்க வேண்டும்.
அன்னைத் தெரசா நோயாளிகளிடம் உதவும் பொழுது தமக்கு நோய் வந்து விடுமோ என்று எண்ணாமல் நோயாளிகள் நலமடைய வேண்டும் என்றே நினைத்து வாழ்ந்தவர். இதனாலே அவர் தன்னலமற்று விளங்குகிறார்.
நண்பர்களே! நாமும் பல தொண்டுகளைப் பிறரின் நலனுக்காகச் செய்து தன்னலமற்று விளங்க வேண்டும்.
பிறர் நலமே நம்தாரக மந்திரம்
அ. சாபிர் உசேன்
9 ‘அ’
