
பெரியோரைப் போற்றுதல் கடவுளை போற்றுதல் போன்றது. இறைவன் பெரியோரின் உருவத்தில் நமது கண்களில் தென்படுவார். இறைவனுக்கு உருவமில்லை. ஆனால் அவன் பெரியோரின் உருவத்தில் இருப்பான். நாம் பெரியோர் கூறுவதை மதிக்க வேண்டும். இதனையே திருவள்ளுவர் பெரியாரைப் பிழையாமை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.
ஆற்றல் மிக்க பெரியவரைப் போற்றி மதிக்காமல் இருந்தால் அப்பெரியவர்களால் தீராத துன்பம் வந்து சேரும். தான்S கெட வேண்டும் என்றால் பெரியவர்கள் கூறும் எதையும் கேட்க மாட்டார்கள். தான் நல்வழியில் போக வேண்டும் என நினைத்தால் பெரியோர்கள் சொல்வதை மதிப்பர். சிறந்த துணையையும் பாதுகாப்பையும் பெற்றவர் என்றாலும், தவ ஒழுக்கம் கொண்ட பெரியவர் கோபம் கொண்டால் பிழைக்கவே முடியாது. அதனால் பெரியோரைப் போற்றுதல் வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அவர்களைப் போற்றிக் காத்தலும் வேண்டும்.
கி.சாய் மீரா,
IX ‘அ’
