
‘உணவில்லா நாளுண்டு
ஊடகமில்லா நாளில்லை’–
என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஊடங்களே நம்மை ஆட்டிப் படைக்கின்றன. முக்கியமாக 2015 – ல் இருந்து ஊடகங்கள் உணவை விட முக்கியமாக ஆகிவிட்டது. இந்த காலத்தில் நீங்கள் இளைஞர்களைப் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் தங்களின் திறன்பேசிகளில் ஃபார்வர்ட் மெசேஜ் ,வாட்ஸ்ஆப் , பேஸ்புக் , டிவிட்டர் மற்றும் பல ஊடகவாயில்களைப் பார்ப்பதே உலகம் என நினைக்கிறார்கள். ஏதோ அவர்களின் உயிர் அதில்தான் இருப்பதுபோல் அதுக்குள்ளேயே மூழ்கிவிடுவார்கள். இதற்கு அவர்களின் பெற்றோர்களைத்தான் கண்டிக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் எதைக் கேட்டாலும் வாங்கி தரும் பெற்றோர் அவர்களின் குழந்தைகளைக் கெடுக்கிறார்கள். எனவே, பெற்றோர் சரியாக இருந்தால்தான்அவர்களின் குழந்தைகள் சரியாக இருப்பார்கள். தானாகவே இளைஞர்களும் சரியாக மாறி ஒரு புதிய உலகத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
பெற்றோரே மாறுங்கள் !
புதிய உலகமைய உதவுங்கள் !
ப.பவானி
IX A
