மனிதநேயம்

மனிதநேயம் வாழ்க்கையில் அவசியம், மனிதநேயத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் சிறப்பர்.   அக்காலத்தில் மனித நேயம் சிறந்திருந்தது.     முல்லைக்குத் தேர் தந்தான்  வள்ளல் பாரி; புலவரின் சொல்லிற்காகத் தன் தலையையே தரத் துணிந்தான்  கமண வள்ளல் இப்படிப் பலர்.  ஆனால்  இக்காலத்தில்  மனிதநேயத்துடன் இருப்பவர் சிலரே. மனித நேயத்துடன் இருந்தவர்கள் வாழ்க்கையில் அறத்துடன் திகழ்ந்தனர்.  மனித நேயம் என்றால்,  மனிதன் உண்மையாக மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும். நம்முள் மனித நேயம் வளரப் பாடுபடுவோம்.

மனிதநேயத்துடன் வாழ்வோம் ; மற்றவர்களுக்கு உண்மையாகவும் உதவியாகவும் இருப்போம் என்று உறுதியளிப்போம்.

.தேஷ் சர்வஜித்,

7 –  அ