
மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத தெரசாவும். நெல்சன் மண்டேலா. ஹெலன் கெல்லர் போன்ற சான்றோர்கள்தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்ற வேண்டும்? ஏனெனில் இவர்கள் தனக்குப் போகத் தான் தானமும் தர்மமும் என்ற தகைமையைத்தாண்டி தன் வாழ்வை முழுவதுமாக சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டதுதான். நாம் யாரும் அவ்வளவு உயர்த்திற்குக் கூட செல்ல வேண்டியதில்லை. நம் கண் முன்னே நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் நம் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற அளவு அதனைச் செய்யலாமே!
மனிதநேயம் என்பது மனிதர் மேல் கொண்டுள்ள நேயம் என்றால், அந்த வகையில் நாம் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பதே உண்மை. ஆனால் மனித நேயம் என்பது மனிதர் மட்டும் கொள்ளும் நேயம் என்றில்லாமல் சற்றே விரிந்த பார்வையோடு இயற்கையின் மாபெரும் படைப்பான மனிதன் தன்னைப் படைத்த இயற்கை முதல் தான் படைத்த விஞ்ஞானம் ஈறாக அனைவரிடமும் காட்டுவதே ஆகும் என்பதை உணர வேண்டும்.
இன்றைய சூழ்நிலையைப் பொருத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பனவற்றை முன் வைப்போமேயானால் அவை, இயற்கையின்பால் மனிதன் கொள்ளும் மனித நேயம்; அரசு தன் மக்களின்பால் காட்டும் மனித நேயம்;தனி மனிதன் மற்றொரு மனிதனின் பால் கொள்ளும் மனித நேயம்.
மனிதன் என்பவன் இயற்கைத்தாயின் படைப்புகளின் உச்ச வரம்பு. வடக்கில் பனி மழை கொட்டுவதும் ஆற்று வெள்ளத்தில் உயிர்கள் மடிவதும். தெற்கில் வறட்சியால் பசியால் நீர் ஆதாரமின்றி உயிர்கள் மடிவதும் ஒரே இந்தியாவில்தான் நிகழ்கிறது. அப்துல் கலாம் அவர்களின் கனவும், சி,ஆர். காமராஜ் பொறியாளர் அவர்களின் திட்டமுமான, அதிதிறன் நீர்வடிப்பாதையை உருவாக்குவதன் மூலம். உயிரினங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.
இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம் மனிதப் பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம். மலரை பார்ப்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு வந்தச் செடியின் சொந்தக்காராய் அதன் பராமரிப்பாளராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இல்லாவிட்டால் அதன் பெயர் திருட்டு என்றாகிறது. நம் குழந்தைகளே நாளைய சமூகம். அவர்களுக்கு நாம் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். மற்றவர் குடும்பத்தை மாசில்லாத மனதோடு பார்ப்பதுகூட மனிதநேயம்தான்,
மனிதநேயத்தை இவ்வாறு பட்டியல் போட்டுக் கொண்டே போனால் பேனாவில் மை தீர்ந்து விடும். பேசும் வார்த்தைகளும் முடிந்துவிடும். முடிவில் நம் சமூகம் விடிந்ததா என்பதே கேள்வி. முடியும் என்றெண்ணியதால் தான், விண்ணை முட்டி நிற்கிறது பல துறைகளில் நாம் கண்ட வளர்ச்சி.
ஆனந்த்.ச
10-அ
