
கண்களை மூடியதும் செவியில் குயிலின் கூக்குரல்
திரும்பிப் பார்த்தேன். இயற்கையின் எழில் கொஞ்சும்
இடம் அது. பார்க்கும் இடம் எல்லாம் பச்சை வர்ணம் தீட்டிய ஓவியமாய்க் காட்சியளித்தது. பறவைகள் ஆடிப்பாடிப் பறந்தன. விலங்குகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. காற்றில் வந்தது குழலோசை. அதைத் தேடிச் சென்றன என் கால்கள். குழலோசை வந்த இடத்தில் ஒரு மரக்கன்று இருந்தது. அதை நான் கையில் எடுத்ததும்
ஒரு ஒளி அதில் இருந்து பிறந்து அவ்விடத்திற்கு எழில் சேர்த்தது. பின் அக்கன்று என்னிடம் ஏதோவொன்றைச் சொல்வது போல் இருந்தது. ஒன்றும் புரியவில்லை. என் கைகளில் இருந்த அக்கன்று கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது. அது எங்கே சென்றது என்று தேடிச் செல்லும் போது என் பெயரைச் சொல்லி என் தோழி அழைத்தாள் கண்களைத் திறந்து பார்த்தேன். அப்பொழுது நான் ஒரு மரக்கன்றை நட்டிருந்தேன். அப்பொழுதுதான் எனக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது, நான் கண்டது கனவல்ல அது எதிர்காலத்தின் துகள்கள். நாம் செய்யும் ஒரு நல்ல செயலால் இந்த உலகே காக்கப்படும். அதனால் நாம் அனைவரும் மரம் வளர்ப்போம்! உலகைக் காப்போம்!
மரம் அது இறைவன் கொடுத்த வரம்
உ. யோகப்புவனேஸ்வரி
12-அ
