மலைச் சரிவில் நடைப்பயணம்

4

 

நானும் என் தங்கையும் மலைச்சரிவில் நடைப்பயணம் செல்லும் வழியில் குளிர்காற்று  வீசியது.  அங்கிருக்கும் பறவைகள் அனைத்தும் அழகாக இருந்தன.  நான் படம் பிடிக்கும் பொழுது அவை பறந்தன.       அதன் பிறகு நான் ஒரு பெரிய பாறையின் மீது  ஏறினேன்.  ஏறிப்  பார்த்ததும் என் மனம் வியப்படைந்தது.  நம் உலகமே பசுமையால் சூழ்ந்தது போல் எனக்குத் தோன்றியது. 

 

      ஓரிடத்தில் ஓர் ஏரியைப் பார்த்தேன்.  அதில் வானவில்லின் வண்ண வடிவம் தெரிந்தது.  நான் வானத்தைப் பார்த்ததும் அது அழகாக இருந்தது.  அதனைப் பார்த்து  நான் வியந்தேன்.  எனக்கு ஒன்று தோன்றியது.  நான் வாழும் பகுதிகளையும் இதுபோல பாதுகாத்தால்  தூய்மையாக இருக்கும் என்பது தான்.

ஒவ்வொருவரும் இதுபோல் நினைத்து செயல்பட்டால் நாடே ஒரு பூங்காவாக மாறும் என்பது உறுதி.

 

ரா.சஞ்ஜெய்

VII ‘ஆ’