மழை நீர் உயிர் நீர்!

நீர் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கிறது.  எனவேதான் திருவள்ளுவர் மழையை அமிழ்தம் என்கிறார்.  இளங்கோவடிகளும் ‘மா மழை போற்றுதும் , என்று மழையைப் புகழ்ந்துள்ளார்.  ‘மேல் நின்று தான் நல்கலான்’என்றும் கூறியுள்ளார்.  ஒரு நாட்டின் வளம் மழை வளத்தை அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறது.  நீர் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது.  உப்புக்காக , உரிமைக்காக , சுதந்திரத்திற்காக போராடிய நாம், தற்போது நீருக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  மழைநீர் தான் நமக்கு மிகுதியான அளவு நீரைத் தருகிறது.  நாம் காற்றை மாசுபடுத்துவதால் மழை நீரின் தன்மை அமிலமாக மாறி தாவரங்களையும், விலங்குகளையும்,   மனிதர்களையும் , வாழ்விடங்களையும்  பாதிக்கிறது.  நமது எதிர்காலம் நமது நிகழ்காலத்தின் செயல்களால்தான் நிகழ்த்தப்படுகிறது.  எனவே.  நாம் நீரின் அருமையை அறிந்து, நமது எதிர்காலத்தைக் காக்க வேண்டும்.

மழை நீர் உயிர் நீர் !

மு.அமிர்தா

X A