மாணவரின் பொது நலத்தொண்டு

முன்னுரை :-

மனிதர்கள்கள் தமக்கென வாழாமல் பொது நலத்திற்கென வாழ்ந்தால்தான் நாடும் வீடும் சிறப்படையும்.  பொது நலப்பணிகளில் மாணவர்களின் பங்கு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மாணவப் பருவம் :-

நமது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் மாணவப் பருவம் தான்.  மாணவர்கள் தங்கள் காலத்தை வீணாக்காமல் செய்தற்கரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

இன்று நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவின்றி அறியாமை. மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ளனர்.  இவற்றைப் போக்கிப் புதிய சமுதாயத்திற்கு வழி வகுப்பது மாணவர்களின் கடமையன்றோ

கல்வியறிவற்ற மக்களுக்கு கல்வி கற்பிக்க  முன் வர வேண்டும்.

சாரணர் இயக்கம் :-

சாரண இயக்கத்தை சார்ந்த மாணவர்கள் புயல், வெள்ளம், தீ போன்றவற்றில் சிக்pfpfகித் தவிப்போர்க்கு உதவலாம்.  நெரிசல் மிக்க நேரங்களில் காவலர்களுக்குத் துணை நின்று போக்குவரத்தை ஒழுஙகுப்படுத்தலாம்.  அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்குச் சுத்தம் சுகாதாரத்தை எடுத்துக் கூறி நல்வாழ்வு வாழ அறிவுறுத்தலாம்.

பிற பணிகள்:-

கிராம மக்களுக்குச் சிக்கன வாழ்கை. குடிசைத் தொழில்கள் பற்றிக் கூறி அவர்களுடைய பொருளாதார நிலை உயர வகை செய்யலாம்,  இது தவிர சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் இன்றியமையாமையை விளக்கிக் கூறலாம்.  முதியோர்களுக்கு எழுத்தறிவித்தல், கிராமத்தில் வாழும் மக்களுக்கு அரசின் நல்ல திட்டங்களை அறியச் செய்தல் வங்கிகளில் கடனுதவி கிடைக்கச் செய்தல் முதலிய பல்வேறு வழிகளில் மாணவர்கள் தொண்டினைச் செய்யலாம்.

முடிவுரை:-

இவ்வாறு மாணவர்கள் பொது நலப் பணிகளில் ஈடுபட்டால்  நாட்டில் அறியாமை நீங்கி வளம் செழிக்கும். தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக விளங்கும்.  மாணவர்கள்  தூண்டுகோலாய் இருந்து நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு உதவுவார்களாக!

அ. சிவபாரதி

X A