
மாணவர்கள் தான் நம் இந்தியாவின் வருங்கால வாழ்வு. இளைஞர்கள் நமது நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்ற வேண்டும். இக்காலக் கட்டத்தில் இந்தியாவின் வாழ்வு இளைஞர்கள் கைகளில் தான் உள்ளது. மாணவராuhகிய நாம், நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து வறுமை நிலைகளையும் ஆராய்தல் வேண்டும். நம் நாட்டுப்புறக் கலைகளையும் அதன் பிறப்பிடமான கிராமங்களையும் காத்தல் வேண்டும். அவ்வாறு கிராமங்கள் அழிந்து விட்டால் இந்தியாவின் வேளாண்மை மூலம் வருவாயானது குறைந்து விடும். அந்த கிராமங்களின் வாழ்வானது நம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. நாம் நம் அரசாங்க ஆணைப்படி தூய்மை இந்தியா திட்டத்தை கைப்பற்ற வேண்டும். வீடுதோறும்; சாலைதோறும் மரங்களை நடுவது நம் மாணவர்களின் கடமையாகும். நாம் ஏழை உழவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்களுக்கு வேளாண்மை துறையில் உதவ வேண்டும். நம் நாட்டுப் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். நாம் ஏழை குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும்.உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மாணவர்களாக இருந்தால் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம்.
ஸ்ருதிப்பிரியா
10 ‘அ’
