
இவ்வுலகில் எல்லோருக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும் அந்த கனவுகள் லட்சியமாகவும், ஆசைகளாகவும் காணப்படலாம். என் லட்சியம் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பது அதில் குழந்தை மருத்துவராகவும் , சர்க்கரை நோய் மருத்துவராகவும் ஆக வேண்டும் என்பதுதான். என் நோக்கம் ஒரு மருத்துவமனையைக் கட்டி அதில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சைகளும், தரமான மருந்து மற்றும் மாத்திரைகளும் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றி அதை மகிழும்படிச் செய்வேன்.
அது மட்டுமன்றி ஏழைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதும் ஒரு கனவு,
என் கனவை நிறைவேற்ற என்னால் செய்ய முடிந்த முயற்சிகளை எடுப்பேன்,,,,,,,,,
செய்து முடிப்பேன் !!! சாதிப்பேன் !!!!!!
பவித்ரா. கெ
VIII ‘ஆ’
