முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்

மகிழ்ந்து கொண்டாடுவோம்.

நமது கனவுகளுக்கு முட்டுக்கட்டை

போடும் தடைகளைத் தாண்டுவோம்.

காலத்தே கடமையைச் செய்தால்

தோல்வி நமக்கில்லை.

நல்ல வழியைத் தேர்ந்தெடுத்தால்

கவலை நமக்கில்லை.

தடைகள் உருவாவது உடைக்கத்தான்

உடைத்தால் வெற்றி உனக்குத்தான்.

திறமை கையில் இருக்கும் வரை

போராடு முடிந்தவரை.

நண்பா! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்!

முயலும் வெல்லும்; ஆமையும் வெல்லும்;

முயலாமை என்றுமே வெல்லாது!!!

ச.  கீர்த்தனா

10 ‘ஆ’