
என் அப்பா முதலில் என்னிடம் நாம் விமானத்தில் பயணம் செய்யப் போகிறோம் என்று கூறிய போது நான் மிகவும் ஆனந்தம் கொண்டேன். நாங்கள் மே 2.5.14 அன்று சென்னை விமானநிலையத்திற்கு சென்று
இமிக்ரேஷன் முடித்து விட்டு விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். விமானம் வந்த உடன் நானும் என் குடும்பமும் விமானத்தில் ஏறினோம். நான் உள்ளே போனதும் மிகவும் ஆனந்தம் கொண்டேன். ஆனாலும் நான் சிறிது பயம் கொண்டிருந்தேன். ஏனெனில், நான் கேள்விபட்டு இருக்கிறேன். எதிர்பாராத சில சம்பவங்கள் நேரிடும் என்று. சிறிது நேரத்தற்குப் பிறகு நாங்கள் அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டுப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு நான் என் பக்கத்தில் உள்ள ஜன்னலைத் திறந்தேன். அதைப் பார்த்த போது பஞசுகளை அடுக்கி வைத்தது போல் மிகவும் அழகான வெண் மேகங்கள். இயற்கை அனைத்தையும் கண்டு ஆச்சரியம் கொண்டேன். விமானம் மேலே
செல்லச்செல்ல மனிதர்கள் கூட மிகச் சிறிய உருவில் காணாமல் போய்விட்டார்கள். பின் ஏன் இந்தப் போட்டிகள் பொறாமைகள் என எனக்குள் தோன்றியது. அந்தக் காட்சிகள் இன்னும் என் உள்ளத்தில் மகிழ்வைத் தூண்டுகின்றன. என் முதன்முறை விமானப் பயணம் என்னை மெய் சிலிர்க்க வைத்து எனக்குள் மிகுந்த ஆனந்தத்தையும், இன்னும் ஒரு முறை போக வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.
இனியா கண்ணன்,
VII ‘இ’
