
இந்தியாவில் பல பேர் படித்தும், அப்படிப்பிற்கு தகுந்த வேலை இல்லையே என ஏங்குகிறார்கள். சிலர் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அரசாங்க வேலைதான் தனக்கு வேண்டுமென்று நினைக்காமல் சுயமாக வேலை செய்து சம்பாதிக்கத் துடிக்க வேண்டும்.
சிலர் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம் நாட்டில் இல்லாதது வெளிநாட்டில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. அதனால் நம் இந்தியாவில் சுயமாக தொழில் செய்ய அரசாங்கம் பலவித திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதில் நமக்குத் தகுந்ததைத் தேர்ந்தெடுத்து ஆர்வத்துடன் ஈடுபட்டால் நமக்கு நன்மைகள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று தாம் கற்ற கல்வியை விற்றுவிடுகிறார்கள். குறைவாக இருந்தாலும் நம் நாட்டில் நம் சொந்த பந்தங்களோடு கூடி பணம் சம்பாதித்து மகிழ்ந்திருப்பது சாலச்சிறந்தது.
படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லையே என எண்ணாமல்
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்
கவிஞர் தாராபாரதியின் வாக்கினை எண்ணி செயல்படுவோம்!
ச.தேஜேஷ்வர்
VIII C
