விழாக்களைக் கொண்டாடாதே விவசாயத்தைக் கொண்டாடு

இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம்.  தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் நமது மிக முக்கியமான தேவை உணவு.  ஆனால் நம் விவசாயிகள் செய்யும் போராட்டமோ அல்லது அவர்களது துயரமோ அரசால் கண்டு கொள்ளப்படுவதில்லை.நமது அரசு விழாக்கள் கொண்டாடுவதில் காட்டும் அக்கரையை விவசாயத்தின் மீது காட்டியிருந்தால் நமது மாநிலம் செழித்திருக்கும்.  நமது நாட்டில் உள்ள மாநிலங்கள் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு தண்ணீர் கொடுத்திருந்தால் பயிர்கள் வாடி விவசாயிகள் மடிந்திருக்க மாட்டார்கள்.  பயிர்களின்  விலையை விளைத்தவனே நிர்ணயிக்கும் நாள் வரும் வரை விவசாயி மடிந்து கொண்டுதான் இருப்பான்.  நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் இப்பொழுது வீடுகள் ஆகிவிட்டன.  இதனாலும் விவசாயம் பாதிக்கப்படும்.  நாம் ஏரிகளில் வீடுகட்டாமல் இருந்திருந்தால் . நாம் வேறொரு மாநிலத்திடம் நீருக்காக சண்டையிட தேவைப்பட்டிருக்காது.

இவ்வுலகமே நம் விவசாயியின்

காலில் விழும் நாள் தொலைவில் இல்லை.

வேளாண்மையைக் காப்போம்

உலகை வெல்வோம்.

ரா. சீ.ஸ்ரீராம்

10 ‘அ’