விழும் மரங்கள் அழியும் காடு

எழுந்திரு கண்ணே மணி 7 ஆகிவிட்டது.

அம்மாவின் கூச்சலில் அதிர்ந்தெழுந்தேன்.

எங்கே நான் சுவாசித்த காற்று;

நேசித்த பூக்கள்;  யோசித்த இயற்கை?

ம்ம் ….. ஏசி காற்றில்

இயற்கை மடிந்தது;  தூசிக் காற்றில்

ஆரோக்கியம் குறைந்தது;

அறிவில் பாசி படிந்தது;

நாசித்துவாரம் அடைத்தது;

காய்கின்ற மரங்கள் ஏங்கின.

கரங்கள் நீட்டி எனை அழைத்தன.

அன்று முடிவெடுத்தேன்  நான்.

மரங்கள் வளர்ப்போம்!

மழைப்பெறுவோம்!

காடுகளை வளர்ப்போம்!

மனித வாழ்வை மேம்படுத்துவோம்!

இயற்கையை நேசிக்கும்

வெ.மதுரபாலா

  12-ஆ