வெற்றியை நோக்கிப் போ……..

நாம் அன்றாடம் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.  அந்தப் பரபரப்பில் வலிகளும், இடர்களும் இன்னல்களும் , இன்பங்களும் கலந்து வருகின்றன.  உண்மையான நிம்மதி என்பது பணமோ, புகழோ , பெயரோ, ஆடம்பரமோ அல்ல.  நாள்தோறும் உழைத்து நாளின் முடிவில் நம் படுக்கையில் வந்து படுத்து கைகால்களை நீட்டி ஒரு ஆறு மணி நேரம் உறக்கம் இதைவிட நிம்மதி வெறொன்றுமில்லை.  ஒருவனின் புகழுக்குப் பின்னால் பல வலிகள்  இருக்கும்.  அன்று காந்தி அவமானப்படாமல் போயிருந்தால் இன்று நமக்கு விடுதலை கிடைத்திருக்க வாய்ப்பில்லை.  ஒரு சுகத்துக்கு பின்னால் ஒரு வலி, ஒரு வலிக்கு பின்னால் ஒரு சுகம், இது மனித வாழ்க்கையின் இயல்பு.  வலிகளால் மட்டுமே நம்முள் இருக்கும் நன்மையை, நம்பிக்கையை, வெறியை வெளிக்கொணர முடியும்.  வலி ஒருத்தனை நோகடிக்கும் அதே வலி அவனை வாழ்க்கையில் உயர நம்பிக்கையைத் தரும்.

நம் வாழ்க்கையில் இருந்து சான்று…

சிறு வயதில் சைக்கிளில்  ( சக்கரவண்டி ) இருமுனைகளும் இல்லாமல் வெறும் இரண்டு சக்கரங்களை வைத்து ஓட்டுவோம்.  முதலில் அடிகள்,  வலிகள்,  வெறுப்பு,  ஆனால் ஒவ்வொரு முறையும் வலி தந்த

வெறி நம்மை இன்று மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு நம்பிக்கையைத் தந்தது.  இந்தச் சக்கரங்களில் இருந்து ஒரு வாழ்க்கைச் சக்கரம் உருவானது.

சொந்தங்கள்  தந்த வலிகள் இன்று சொர்க்கத்தை உருவாக்க வழி தந்தது,  சமுதாயம் தந்த வலிகள் இன்று நல்ல சமூகத்தை உருவாக்க வழி தந்தது.  வாழ்க்கை தருகின்ற வலிகள் நாளை வெற்றிக்கு வழித்தடமாக உருவாகும்.  ஒவ்வொருவரின் வலிக்குப் பின்னால் ஒரு வெற்றி நிச்சயமாக உருவாகும்.  வாழ்கையில் ஸ்லோகங்கள் உச்சரிக்கிறீர்களோ இல்லையோ இதை மட்டும் உச்சரியுங்கள்,

வலித்தாலும் பரவாயில்லை வெற்றியை நோக்கிப் போ!!!

நம்பிக்கையை இழக்காமல் வாழ்க்கையை நோக்கிப் போ!

இது உங்கள் இறுதி மூச்சு வரை உங்களை வழி நடத்தும்.

கிரிநந்தினி

10  ‘இ’