வேளாண்மை என்னும் தெய்வம்

சூரியன் உதித்தால் பூக்கள் பூக்கும்

மழை பெய்தால் தாகம் தணியும்

தென்றல் தீண்டினால் உள்ளம் மகிழும்

நிலம் இல்லையெனில் வாழ்வு இல்லை

வானம் இல்லையெனில்

vஎல்லையற்ற கனவுகளில்லை

வேளாண்மையே

நம் நாட்டின் முதுகெலும்பு

வேளாண்மை

உடைந்தால் நம் நாடென்னவாகும்

நாமென்னவாவோம்

சிப்பிக்குள் விழுந்த நீர்

முத்தாகும்

விதைத்த நிலத்தில் விழும் நீர்

பயிராகும்.

முத்தாகும் நீரினை  சிப்பி பாதுகாக்கும்

பயிராகும் விதைகளை விவசாயி பாதுகாப்பான

அந்நிய நாட்டினரையும் வாருங்கள் என அழைத்து

வயிறு நிறைந்த பின் அனுப்பும் இந்திய நாட்டில்

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு வயிறு  நிறைய

உணவு அளிக்க

வேளாண்மை வேண்டும்.

வேளாண்மையை வளர்த்து நிலைநாட்டுவோம்!!

விவசாயிகளை தெய்வத்திற்கு நிகராக மதிப்போம்!!!

மு. அமிர்தா

11 ‘அ’