
எனது இந்தியத் திருநாட்டில் எண்ணிலடங்காத வளங்கள் கொட்டிக் கிடந்தன. அவற்றை ஆங்கிலேயர்கள் அள்ளிச் சென்றனர். ஆனாலும் இன்னும் நம் நாட்டில் நிறைய செல்வங்கள் இருக்கின்றன, அவற்றைப் பேணிக் காப்பது மாணாக்கராகிய நமது கடமையாகும். நதிகள், ஏரிகள், காடுகள், விலங்குகள், விவசாய நிலங்கள், ஆகாயம், பூமி போன்றவற்றைக் காக்க நாம் சிலகடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காடுகள் வளர்ப்பதினால் மழைப் பொழிவைப் பெற முடியும். இதன் மூலம் விவசாயம் செழுமை பெறும். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் செழித்தால் நாடும் வளம் பெறும். நாடும் வெப்பமயமாதலில் இருந்து தப்பித்து விடும் இந்த உலகத்திற்கே ஒரு முன்னோடியாகத் திகழ முடியும்.
மிகப் பெரிய வல்லரசு நாடான நாம் மரங்களை வெட்டி எரிவதைத் தடுத்து மரங்களை நட வேண்டும். நாம் செய்யும் இந்தச் செயல்களினால் பூமியைக் காப்பாற்ற நம் பங்களிப்பு மிகவும் முக்கியம். மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாகவும் திகழ முடியும். மரம் வளர்ப்பதினால் நல்ல மழை பொழியும். ஆறுகள், ஏரிகள் நிரம்பும். இதனால் நாட்டில் வறட்சி நீர்ப் பற்றாக் குறையின்றி அடுத்தவரிடம் கையேந்தும் நிலை மாறும். இதனால் தான் திருவள்ளுவர் தனது குறளில்
“நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு”,
என்று கூறியுள்ளார்.
நா. சுசரியா
VI ‘இ’
