இணையம் நமது கணையம்

10

இந்நூற்றாண்டில் நம் கண்முன் ஏற்பட்டுள்ள ஓர் அதிசயம் இணையம். இதுவரை அறிவியலார் கண்டறிந்த கருவிகள்  உண்மைகள் படைப்புகள் யாவற்றுக்கும் மேலான  ஒப்புயர்வில்லாத ஒன்று இணையம் ஆகும்.   

     இதன்  வரலாற்றைக் காண்பது நம் கடமை.  1968 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல கணிப்பொறிகளை இணைத்து தகவல் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.   பின்னர் இந்த இணைப்புகள் படிப்படியாகப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.  லாஸ் ஏஞ்ஜல்ஸில் 1969 ஆம் ஆண்டு 500க்கும் மேற்பட்ட கணினிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. 

           பின்பு 1972-இல் ஏறத்தாழ 50 பல்கலைக்கழகங்கள்  ஒன்றாய்   இணைக்கப்பட்டன.   இதுவே இன்றைய இணைய வலைபின்னலுக்கு அடிகோலியது.  இதன்பின்பும் இணையம் எல்லோராலும் பின்பற்றப்பட்டதா என்றால் இல்லை அப்போது யூனிக்ஸ் எனப்படும் கணிப்பொறியில் இயங்கும் மென்பொருள் பெரிதும் பயன்பாட்டில் இருந்து வந்தது.    1998 ஆம் ஆண்டு மார்க் ஆண்டர்சன் என்ற மாணவர் மொசக் என ஒரு புதுமையான மென்பொருளைக் கண்டு பிடித்தார்.    இதன் மூலமாகத் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்திப் பல கணினிகள் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டன  இதனால் கணினி பிறந்தது.

           இணையத்தால் உண்டாகும் பயன்கள் அளவற்றவை,  அவற்றில் இன்றியமையாத ஒன்று இ.மெயில்.  இதில் எழுத்து,  ஓவியம், ஒலி முதலிய பலவற்றை இன்று காணலாம்,  இவற்றை இண்டெர்நெட் வெப்சைட் என்று அழைக்கின்றோம். 

           இணையம் மூலமாய் வளர்ந்த மற்றொரு வளர்ச்சி இ.காமெர்ஸ்.  இது எலெக்டரானிக்ஸ்   முறையில்  செய்யப்படும்  வாணிகம்  ஆகும். 

இதனால் வணிக முறை மாறிவிட்டது.  இதன் மூலம் நாம் எங்கிருந்தும் எங்குள்ள பொருளையும் விலைக்கு வாங்கலாம்.

             இந்த இணையப் பயன்பாடு  அடுத்து வரும் ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கிறது.  மருத்துவர்களுக்கு என தனி வெப்சைட் நிறுவப்பட்டுள்ளது.  மருத்துவர் ஒரு கட்டணம் செலுத்தி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நமக்கு வேண்டிய மருத்துவ அறிவுரைகளையும் பெறலாம்.  இதற்குரிய கட்டணத்தைக்  கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

        இப்படிப்பட்ட இணையத்தை நாம் என்றென்றும் பயன்படுத்தி பயன் பெறுவோமாக ! 

            இணையம் நமது கணையம் !!!

பா.காவியா

IX‘இ’