
மழைகளை மேகங்களின் மகிழ்ச்சி
என நினைக்காதீர்!
யாருக்குத்தெரியும்
அவை மரங்களை வெட்டுவதற்காக
மேகங்கள் விடும் கண்ணீராக இருக்கலாம்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.
சிறு சிறு துளி கூட பேரிடர் ஆனது,
இயற்கையின் சீற்றத்தால் அல்ல
நாம் செய்த
இயற்கையின் மாற்றத்தால்.
துளிப்பா

மண் மேல் விழும்
விதையெல்லாம்
மரமாக மாறட்டும்!
மரத்திலிருக்கும் இலையெல்லாம் அதற்கே
உரமாக மாறட்டும்!!
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’
