வலி

நான் ஒரு நிமிடம்
நினைத்திருந்தால் காப்பற்றிருக்கலாம்
ஒரு உயிரை.
என் கண் முன்னே
அடித்து, உதைத்து, வெட்டி
இழுத்துச் செல்கிறார்கள்
வேருடன் மரத்தை.
காகிதம்

ஆயிரம் காகிதங்களைக்
கசக்கி எறிந்து
ஒரு கட்டுரை எழுதினேன்
மரத்தின் முக்கியத்துவம்
என்னும் தலைப்பில்
அபினேஷ் கிருஷ்ணா
XII ‘ஆ’
