
வாழ்க்கையின் ஒரு பக்கம் சந்தோஷப் படை
அதன் மறுபக்கம் சவால்கள் நிறைந்த தடை.
போராடி வெல்வோம் தடைகளை,
உருவாக்குவோம் புதிய கடமைகளை.
வியர்வை சிந்தி தடையை முந்தி
வாழ்க்கைக் கடலை நீந்து.
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்தரும்
நல்ல முயற்சி நல்ல பலனைத் தரும்.
ஒழுக்கம் உயர்வு தரும்.
தடைகள் உழைப்பின் ஊதியம் தரும்.
நண்பா!
தடைகளை உடை, வரலாறு படை.
போராடு, உறுதியாய் போராடு!
எதிர்த்து நில்! தடைகளை எதிர்த்து நில்!
சொல்! நான் இந்திய நாட்டின் புதிய தலைமுறை என்று!
ஆனால் ஒன்று நிச்சயம்.
ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு
தடைகள் உண்டானால் புதுவாழ்வும் உண்டு.
அ.லீலா
10 ‘ஆ’
