
தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவது, எளிமையான செயல் அல்ல என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. தடைகள் என்பது நம்மை நம் வாழ்வில் ஒருபொழுதும் தீங்கு இழைப்பதற்காக இல்லை. ஒரு தடை வந்தால்நம் மனம் கண்டிப்பாக வருத்தப்படும் இவ்வளவு உழைத்தும், தன் முயற்சிக்குப் பயன் கிடைக்காமல் போனால் யார் மனமாக இருந்தாலும் அது வலிக்கத்தான் செய்கிறது. ஆனால் நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு தடையும், இடையூறும் நம்மை வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு உயரத்திற்கு எடுத்துச் செல்லத்தான் போகிறது.
சான்றாக காந்தி, இந்தியருக்கு எதிரான கருப்புச் சட்டங்களை ஒழித்து, அகிம்சை வழியில் போராடி, விடுதலை பெற்றுத் தந்தார். பெரியார் பெண்கள் கல்வி கற்றால்தான் சமுதாயத்தில் தலைகீழான புரட்சி ஏற்படும் என்பதற்காகவே அயராது உழைத்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி வழக்கத்தை ஒழிப்பதற்கு தன் உடல் நலத்தையும் வருத்தி போராடினார். இவ்வாறு தடைகளை எதிர்க்காமல் சரித்திரம் படைத்தவர்கள் யாவரும் இல்லை. இழப்பே வெற்றிக்கான முதல் படி என்பதற்கு இணங்க நம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் போராடினால் வாழ்வில் சந்திக்கும் எந்தத் தடையையும் கடந்து, வெற்றிக்கான பாதையைச் சேரலாம்.
அ.சக்தி
10 ‘அ’
