
என்னுடன் படிக்கும் மாணவிக்கு இன்ஃபினி பேச்சுப் பேசுவதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்தாள். ஆதலால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மேடையில் பேசும் முறை தெரியாது. இருந்தாலும் நான் பேசுவதற்கு ஒத்துக் கொண்டேன். முதலில் என் தமிழ் ஆசிரியரிடம் சரியாகப் பேசவில்லை. ஆனால் என் தமிழ் ஆசிரியர் என்னை ஊக்குவித்தார். முதன்முதலில் என் பள்ளியில் இன்பினி நாளில் பேச வேண்டும். என் பள்ளியில் என் அம்மாவையும் அழைத்தார்கள். நான் 7 ஆம் வகுப்பு மாணவர்களின் முன்னிலையில் பேசத் தொடங்கினேன். பேசி முடித்தவுடன் அங்கிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், துணைத் தலைமை ஆசிரியர் என்னை பாராட்டினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
பின், அய்யாசாமி பள்ளியில் பேசினேன். அங்கிருந்த மாணவர்களும் என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டார்கள். என்னுடன் இருந்த என் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியரும் என்னைப் பாராட்டினர். நீ முதல் தடவைப் பேசுவது போல் இல்லை நன்றாகப் பேசினாய் என்றுத் தாளாளர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தேன். மற்றவர் வாழ்க்கையை சீர்படுத்தும் இன்ஃபினி பேச்சு என் மூலமாகவும் நடந்ததை எண்ணி மகிழ்கிறேன். இன்ஃபினி பேச்சிலுள்ள நற்கருத்துகள் மற்றவர்களுக்கு மட்டுமல்ல என்னையும் நல்லப் பாதையில் மாற்றியுள்ளது. இந்த வாய்ப்பைத் தந்த என் பள்ளிக்கு நான் எழுதுவதன் மூலமாக நன்றியைக் கூறுகிறேன்.
எஸ்.மதுமிதா
12 ‘ஆ’
என்.எஸ்.என். பள்ளியில் படிக்கும் நான் இன்பினி என்ற முன்னேற்றப் பாதையிலிருந்து கற்றுக் கொண்டவற்றை ஒரு மேடைப் பேச்சாக எஸ்.சி.எஸ். பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பேசிக் காட்டினேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது. ஏனெனில் நாம் கூறுவதை கேட்டு பலர் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக இருந்தது. அதுபோலவே நான் கூறி முடித்தவுடன் பலத்த கைத்தட்டல். இவை அனைத்தையும் விட முக்கியமானது என்னவென்றால், இப்பேச்சிற்கு முந்தைய நாள் எனக்கு தொண்டை கட்டிக்கொண்டது. நானோ பயந்து விட்டேன். உடனே எனக்குத் தெரிந்த ஒரு சில பாட்டி வைத்தியங்களை செய்து ஒரு வழியாக கூறும் வகையில் சரிபடுத்திக் கொண்டேன். இருந்தாலும் பழைய குரல் திரும்பவில்லை. ஆனால் மதியம் பேச்சினை தொடங்கும்பொழுது நான் ஒன்றை மட்டும் தான் நினைத்தேன், நான் செய்யப்போவது பலருக்கும் கிடைக்கப்படாத ஒரு விசியம். எனவே இதை அருமையாக செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினேன். அதுவும் நன்றாகவே நடந்து முடிந்தது. என் பள்ளி தலைமையாசிரியர் முன்பே கூறினார்கள். நீ நன்றாக உரையாற்று திறமை படைத்ததவன். பதட்டத்தை விட்டு அருமையாக பேசு என்று அதுபோலவே நானும் பேசி முடிக்க, அப்பள்ளியின் தலைமைahprpuiaயாசிரியையும் என்னை, மற்றும் என் பள்ளியை பாராட்டினார்கள். என் பேச்சை கேட்ட பலரில் ஒருவர் என்னிடம் வந்து, நான் அருமையாக பேசியதாகவும், நான் கூறியவற்றை பின்பற்றி பத்து வருடங்களுக்கு பிறகு தங்கள் முன்னே வந்து நிற்பேன். ஆனால் இவ்வாறு அல்ல, சாதனையாளனாக என்று கூறினான். மனமோ அளவற்ற மகிழ்ச்சியை பெற்றது. நாம் கூறுவது நன்றாக இருப்பதைக் காட்டிலும், அதை ஒருவர் உணர்ந்து, நானும் பின்பற்றுவேன் என்று நம்மிடமே வந்துக் கூறுவது உண்மையாக நான் சிலர்க்கு நன்றியைக் கூற விழைகிறேன்.
(1) என் தாளாளர் திருமதி.சித்ராபிரசாத் அவர்கள்
(2) என் தலைமையாசிரியர் திருமதி.கவிதா அவர்கள்
(3) என் துணை தலைமையாசிரியர் திருமதி.விஜயா அவர்கள்
(4) என் தமிழ் ஆசிரியர் திருமதி.இராதா அவர்கள்
(5) என் வகுப்பு ஆசிரியர் திருமதி.அபிராமி அவர்கள்
எனக்கு ஒரு அரிய வாய்ப்பை தந்து அருமையான ஒரு மறக்க முடியாத நேரத்தை உருவாக்கித் தந்தவர்கள் இவர்கள்தான்.
அனைவருக்கும் என் நன்றிகள்,
சு.ராகுல்
11 ‘அ’
என் பள்ளி எனக்கு தந்த ஒரு அரிய வாய்ப்பால் என்னால் இன்ஃபினி பேச்சை எங்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் அய்யாசாமி அரசுப் பள்ளியில் பேசினேன்.
இந்த வாய்ப்பு என் வாழ்நாளில் நான் எந்த நிலைக்குச் சென்றாலும் ஒரு மறக்க முடியாத வாய்ப்பு. என் வாழ்க்கையை திருப்பி போட்ட ஒரு அபூர்வம். அத்தகைய உன்னதமான தாக்கத்தை என்னில் ஏற்படுத்தி உள்ளது.
இதுநாள் வரை எந்த பள்ளியிலும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்ததில்லை. அதனால் என்.எஸ்.என். ஆசிரியர்களுக்கு நான் என் நன்றியை என்றும் தெரிவிக்க வேண்டும்.
வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும், எதனை செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது, எவற்றை பின்பற்ற வேண்டும் என பல நன்மைகள் நான் கற்றுக் கொண்டேன்.
நான் மட்டும் தெரிந்துக் கொள்ளாமல் அதை பல மாணவர்களுக்கு சொல்லி அவர்களையும் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தி- யுள்ளேன். அவர்கள் ஒரு நாள் சிறந்து விளங்கினால் அதில் சிறிதாக எனக்கும் பங்குண்டு என்று நினைக்கும்போது மகிழ்ச்சி பொங்குகிறது.
வாழ்க்கையில் பல நிகழ்வுகளை நம்மால் நினைத்தால் கூட மறக்க முடியாது. அப்படி ஒரு வாய்ப்புதான் இது. என்னையே ஒரு முழு மனிதனாக செதுக்கி சமுதாயத்திற்கு ஒரு நல்ல மாணவியாக மாற்றியது இந்த இன்ஃபினி பேச்சு என்றும் என் மனதில் இருக்கும் நிகழ்வு இது.
ம.கீர்த்தனா
12 ‘ஆ’
என் அனுபவங்கள் …………
நான் இன்ஃபினிதீஸம் என்ற வளர்ச்சிக்கான பாதையில் இருந்து கற்றுக்கொண்டவற்றை பகிர்வதற்காக எஸ்.சி.எஸ் என்னும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் 15 நிமிடங்களுக்கு உரையாற்றினேன். அங்கு குறைந்தபட்சம் 100 மாணவர்கள் இருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்தபோது அங்கு மிகுந்த அமைதி நிலவியது. அங்கு ஒலிக்கருவி சரியாக வேலை செய்யாததால், நான் கருவிகளின் உதவியின்றி பேசினேன். நான் பொதுவாக, என் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேசவேத் தயங்குவேன். ஆனால் என் ஆசிரியர் அளித்த ஊக்கத்தாலும், பயிற்சியாலும், என்னால் நன்றாகப் பேச முடிந்தது. நாங்கள் பேச பயிற்சி எடுத்தபோதே நான் என்னிடம் பல மாற்றங்களை உணர்ந்தேன். நான் பேசிய கருத்துகள் என்னுள்ளும் பதியத் தொடங்கியது. நான் பேசி முடித்ததும், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அனைத்து ஆசிரியர்களும் என்னை வியந்து பாராட்டினார்கள். எனக்கு ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்ற பெருமிதம் தோன்றியது. பல மாணவர்களும் என்னிடம், என் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது என்று கூறினார்கள். அதிலும் ஒரு ஊனமுற்ற சிறுவன், என்னிடம் நான் அவனுக்குக் கொடுத்த ஊக்கத்தைக் கொண்டு பெரிதாக சாதிப்பேன் என்று கூறினான். என் வாழ்க்கையில், நான் உண்மையான மகிழ்ச்சியை அனுபவித்த நாள் அது. எங்கள் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் மற்றும் என் ஆசிரியர் திருமதி,ராதா
அவர்களுக்கும், என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
வி.சந்தியா
11 ‘அ’
இன்ஃபினியிலிருந்து நான் கற்ற விஷயங்கள் ஏராளம். இதிலிருந்து நான் எப்படி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அது மட்டுமில்லாமல் யாரும் என்மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றாலும் நான் என்மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். கண் பார்க்க முடியாதவர், காது கேளாதவர், வாய் பேசமுடியாதவர் ஆகிய எல்லோரும் சாதிக்கிறார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் சாதிக்க இயலும், இன்ஃபினியிலிருந்து கற்ற விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போதும் எனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். நான் பெற்ற அறிவு பிறர் பெற வேண்டும். என்று எமது பள்ளி எம்மை போன்ற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பினை அளித்த்து, நல்ல பழக்கங்களைக் கற்றால் மட்டும் போதாது அதனை பின்பற்ற வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.
கி.சாய்மீரா
10 ‘இ’
இன்ஃபினியிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான முக்கியப் பாடங்களை கற்றேன். கற்றதோடு மட்டுமல்லாமல் என் வாழ்விலும் அதைப் பயன்படுத்தும்போது என்னுடைய ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் உத்வேகம் பிறக்கின்றது.
இன்ஃபினிதீயிசம் என்ற வளர்ச்சிப் பாதையிலிருந்து நான் கற்ற ஒரு சில நல்ல விஷயங்களை மற்ற மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது ஒரு வித நிம்மதி எனக்குக் கிடைக்கறது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
என்பதற்கு இது ஒரு சான்று. இத்தகைய அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்தமைக்கு நன்றி,
ச.கீர்த்தனா
10 ‘ஆ’
