
இக்காலத்தில் சிறுவர்களில் இருந்து முதியவர் வரை அனைவரும் ஊடகங்களில் மூழ்கி உள்ளனர். அதிலும் இளைஞர்களின் பங்குதான் அதிகம். இப்போதைய இளைஞர்கள் நாள் முழுவதும் கணினி, கைபேசி, போன்ற ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையில்லாத விஷயங்களை இவ்வூடகங்களின் மூலம் பகிர்கிறார்கள். இப்போதைய நிலைமை என்னவென்றால் ஒருவர் விபத்தினால் அடிப்பட்டு உயிருக்கு போராடுகிற போதும், இளைஞர்கள் அவரை காப்பாற்றத் தவறி அந்த நபர் துடிக்கும் காட்சியைப் படம் பிடித்து ஊடகங்களில் பகிர்கிறார்க்ள. இப்போதைய இளைஞர்கள் சாலையில் தலை நிமிர்ந்து கூட நடக்க மாட்டார்கள். கீழே கைபேசியைப் பார்த்துக் கொண்டே நடக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஊடகங்களை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.
இளைஞர்களே மாறுங்கள் !
உலகை மாற்றுங்கள்!
கா.காமேஷ்வர்
IX A
