
உன் நண்பன் யார் என்று சொல்! நீ யார் என்று சொல்கிறேன் என்பது முன்னோர் வாக்கு. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொடை வள்ளலாகத் திகழ்ந்த கர்ணன் சேரக் கூடாத இடத்தில் (துரியோதனிடம்)சேர்ந்ததால் வீண் பழிக்கு ஆளானான். நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது நமக்கு மிகப்பெpuரிய பலம்.
திருவள்ளுவர் நட்பு என்னும் அதிகாரத்தில்இவ்வாறு கூறியுள்ளார்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு.
தீயவழியில் செல்லாமல் நம்மை நல்வழிப் படுத்துபவனே நல்ல நண்பன். அப்படிப் பட்ட நல்ல நண்பர்களைத் தேடிச் சேர்வதே சிறப்பு.
சீ.கார்த்திகா
VIII C
