
மரங்கள் நம் நண்பர்கள் என்று புத்தகங்களும், ஊடகங்களும் கூறினாலும் எதிரிகளைக் கொல்வது போல மரங்களை வெட்டுகிறோம். இதனால் பல உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அறிய மறுக்கிறோம். நாம் குடியிருப்பதற்காக பல விலங்குகளின் குடியான காடுகளை அழிக்கின்றோம். இதை எப்பொழுது உணரப்போகிறோம் மக்களே ! பல உயிர்களை இழந்த பிறகா? சிந்தியுங்கள்; மரங்கள் விழுகின்றன; காடுகள் அழிகின்றன; விலங்குகள் மற்றும் பல உயிர்கள் இறக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். மரங்கள் விழுவதற்கு மனிதன்தான் காரணம் என்றால் யாரால் மறுக்க முடியும்? மனிதர்களே இப்பூமியானது அனைத்து வகையான உயிர்களுக்கும் சொந்தமானது. அதைத் தடுக்க நமக்கு அதிகாரம் உண்டா என்ன?
எனவே, மரங்களை வளர்ப்போம்! விழுவதற்காக அல்ல;உயிரினங்களை காப்போம்! இறப்பதற்காக அல்ல; இந்தியாவை ஒரு பசுமை நாடாக மாற்றுவோம்! இயற்கையை இரசித்துக் கொண்டாடுவோம்.
சு.அவந்திகா
8 – அ
